Guru Peyarchi Palan

Guru Peyarchi Palan

    KUMBAM Guru Peyarchi Palan

கும்ப ராசி நேயர்களே, இதுவரையில் உங்கள் கும்ப ராசிக்கு, இரண்டாமிடமான மீன ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் அங்கிருந்து 22-04-2023 அன்று மேஷ ராசிக்கு மாறுகிறார். இது வரை உங்கள் ராசிக்கு 2ல் இருந்த குரு பகவான் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை கொடுத்திருப்பார் இனி 3ம் வீட்டிற்கு வரும் குருவும் நல்ல பலன்களைத் தருவார் என எதிர்பார்க்கலாம். (குருபகவான் மூன்றாவது வீடான தைரியம், முயற்சி ஸ்தானத்தில் மறையப்போகிறார்.) முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஒரு பெரிய மனிதனின் ஆதரவால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ஆன்மீக பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு முதல் உங்களுக்கு கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். குரு பலன் வந்து விட்டது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டின் மீது விழுவதால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குரு தனது 5ம் பார்வையாக ஏழாம் இடத்தை பார்ப்பதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும், பிரிந்துபோன நண்பர்கள் தேடி வருவர். குரு தனது 7ம் பார்வையாக ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் தந்தையாருக்கு கீர்த்தியும், புகழும். மன அமைதியும் சந்தோஷமும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றமும் இருக்கும்.குரு ஒன்பதாம் பார்வையாக பதினொன்றாம் இடத்தை பார்ப்பதால் தொழில் முன்னேற்றமும் நல்ல லாபமும் உண்டாகும். திருமணமான குழந்தையில்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். குரு 3-ம் இடத்திற்கு வருவது சிறப்பு இல்லை என்றாலும் குருவின் பார்வை பலமான இடங்களில் விழுவதால் நிச்சயமாக பெரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் தள்ளி போகலாம். வாக்கு வன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் ஒன்று நடக்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். எடுத்துக்கொண்ட காரியங்கள் சாதகமாக முடியும். ஆன்மீக பணிகளில் நாட்டம் கூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கடின முயற்சிக்கு பின்பே கிடைக்கும். வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. மனம் யோகா, தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் சிறப்பாக அமையும். கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் இருந்தால் சரியாகி விடும். குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். அடுத்தவருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பண வரவு சற்று சுமாரான நிலையில் தான் இருக்கும் என்பதால் செலவுகளை குறைக்க வேண்டியது அவசியம். எதிர்பாராத விதமாக நிறைய அலைச்சல்களை சந்திக்க நேரிடும். உங்கள் முயற்சிகளில் ஒரு சில தடங்கல் ஏற்பட்டாலும் விட முயற்சியால் அதில் வெற்றி பெற முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி கரமாக இருக்கும். பிரிந்து இருந்த தம்பதினர் மீண்டும் ஒன்று சேருவர். வாழ்க்கைத்துணையோடு சேர்ந்து செய்யும் காரியங்களில் ஜெயிக்க முடியும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட சரிவுகளில் இருந்து மீள முடியும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் ஏற்படுவதால் பணப் பற்றாக்குறை நீடிக்கவே செய்யும். முக்கியமான விஷயங்களில் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். முக்கிய வேலைகளை நீங்களே நேரிடையாக செய்வது முடிப்பது நல்லது. தற்போது 3ல் சஞ்சரிக்கக்கூடிய ராகு 30.10.2023க்கு பிறகு 2ல் ராகு, 8ல் கேது என சஞ்சாரம் செய்ய இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இரவு பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. வேலை தொழிலில் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். உத்யோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். ஏழரை சனியில் ஜென்ம சனி தற்போது நடைபெறுவதால் எடுக்கும் முயற்சியில் தேவையற்ற நெருக்கடிகள், எதிலும் எதிர் நீச்சல் போடவேண்டிய நிலை ஏற்படும். பொதுவாக பார்க்கும் போது இந்த குரு பெயர்ச்சியில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்.

பரிகாரம் : பிரதோஷ வழிபாடு தொடந்து செய்து வந்தால் எல்லா தோஷங்களும் விலகும்

( For Kumbam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Kumbam (Aquarius) [Starts: Avitam 3,4 Satayam 1,2,3,4 Puratathi 1,2,3 quarters]

Worship, kindness, down to earth, curiosity, knowledge gathering, organising, listening abilities are good qualities of kumba rasi. They are independent and freedom loving people. Small to large scale business, trading, finance, banking, marketing, sales, goods or cargo, motor, travels, accessories are beneficial areas. Becomes very happy and over enthusiastic during achievements; other way becomes sad and captured by anxiety and highly disturbed during failures. The balance must be maintained properly to avoid unwanted problems. Many kumba rasi people have good talents like writing, conducting events, workshops on awareness, social services. Additional care and caution required during seven and half Saturn. Avoid interfering in others personal matters to escape from enmity. If Sun and Mercury are good in horoscope then possible government and political influence will boost life to new highs.

Victory comes quite often if full skill and ability are shown by kumba rasi people. If proper focused attention and full dedication applied, they can do miracle in many areas. Clever and smart decisions will give greatest results and can come up with flying colours. More practical and keen eye too! Born tend to have a plenty of social charm, but true self esteem required to strike and cultivate relationships. Any output or results always depends on the input for sure. Regular astrological guidance is necessary for many areas. Regular health check up is necessary for sure. Divinely service and good health keeps them to serve until 80 years. Follow mind control exercises and meditation techniques to keep stress free life. Keep studying always new concepts to develop new opportunities, business ideas and higher positions. Lucky colours are yellow, red and green, stones are diamond, emerald, cat's eye, and numbers are 1, 2 & 6.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.